"காதல் கணவருடன் பிரச்சனை" - திருமண வாழ்வுக்கு முடிவு கட்டிய இலியானா? வெளியான ஆதாரம்!

Last Updated: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:00 IST)
ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் ‘கேடி’, படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 


 
ஆனால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் டல் அடித்ததால் பாலிவுட்டிற்கு பறந்தார். பின்னர் அங்குள்ள பிரபல  நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்து வந்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வைகையில் அடிக்கடி இருவரும் சேர்ந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்ககளை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். 
 
இந்நிலையில் தற்போது, இன்ஸ்டாகிராமில் நெருக்கமான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் ஒருவருக்கொருவர் அன் பாலோ செய்துள்ளனர். இதன் மூலம் இவர்களது காதல் முறிந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :