புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (18:42 IST)

60 லட்சம் வேணும்... அடம் பிடிக்கும் பிரபல நடிகை

நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான ஹிரோயினாக மாறினார். 
 
இதன் பிறகு வந்த பாலிவுட் பட வாய்ப்புகளால், பாலிவுட் சென்ற பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்துவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் அமர் அக்பர் அந்தோணி படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் இலியானாவுக்கு ஜோடியாக ரவிதேஜா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 
 
இருப்பினும், இலியானாவை ராம்சரண் தேஜா நடிக்கும் வினயா விதேயா ராமா தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டனர். இதற்கு அவர் ரூ.60 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். 
 
மேலும், சினிமாவில் தனக்கு டிமாண்ட் இருப்பதாகவும், அதனாலேயே இவ்வளவு சம்பளம் கேட்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். என்னத்தான் டிமாண்ட் இருந்தாலும், இவ்வளவு சம்பளம் ஓவர் மா... என முனுமுனுக்கிறது டோலிவுட்.