புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:29 IST)

ஒரே ஒரு பாடலுக்கு ஆட இலியானா இவ்வளவு சம்பளம் கேட்கிறாரா?

தெலுங்கில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட நடிகை இலியானா கேட்ட சம்பளம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
 
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக  கூறப்பட்டது. அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது எனவும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கு இலியானா மறுப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனமாட அவரிடம் அணுகியுள்ளனர். அதற்கு அவர் 60 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். மார்கெட் இல்லாத இலியானாவிற்கு இவ்வளவு கொடுப்பது வேஸ்ட் என கருதி படக்குழுவினர் விட்டால் போதும், வேறு யாரையாவது வைத்து இதனை முடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார்களாம்.