செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (18:18 IST)

உருக வைக்கும் இளையராஜாவின் குரலில் "மாரீஸ் ஆனந்தி" டூயட் சாங்!

வெளியானது "மாரீஸ் ஆனந்தி" டூயட் சாங்! 


 
தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி' மற்றும் 'மாரி கெத்து' ஆகிய பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான "மாரீஸ் ஆனந்தி' என்ற இந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார் என்பது ஒரு சர்ப்ரைஸ் செய்தி ஆகும். இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார்.
 
கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் வெளியாகும் ஐந்து படங்களில் 'மாரி 2' படத்தின் புரமோஷன் மட்டுமே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே இந்த படம் கடும் போட்டியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
'மாரி' முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள 'மாரி 2' படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் சொந்த நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 
மாரி-2 படத்தின்  3 வது சிங்கள் டிராக் "மாரீஸ் ஆனந்தி" என்ற பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்ததையடுத்து சற்றுமுன் இந்த பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.