செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (15:00 IST)

தனுஷ், இளையராஜா சேர்ந்து பாடிய பாடல் இன்று வெளியீடு!

இசைஞானி இளையராஜாவும் நடிகர் தனுஷும் சேர்ந்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக  சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 
 
சமீபத்தில் மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ரவுடி பேபி' பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தனுஷ் எழுதியிருந்த இந்தப் பாடலை அவரும், பாடகி தீ யும் பாடியிருந்தார்கள். அதோடு 'மாரி கெத்து' என்ற பாடலும் ரிலீஸாகி இருக்கிறது. இதனை யுவனுடன் இணைந்து தனுஷ் மற்றும் சின்னப் பொண்ணு இருவரும் பாடியிருந்தார் .   
 
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, 'மாரி'ஸ் ஆனந்தி' என்ற பாடல் வெளியாகவிருக்கிறது. இதனை இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார்.  
 
தற்போது இந்தப் பாடலின் ஸ்னீக் பீக் வெளியாகி இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவனின் இசையில் இளையராஜா பாடியிருக்கும் அந்த பாடலைக் கேட்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.