சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தனுஷுக்கு அடித்த லக்!

Last Updated: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:55 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது.

 
இந்த படத்தில் தனுஷ் ஒரு குறும்பு தனமான "ஏரியா டான்" கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜ இசையில் உருவாகியுள்ள மாரி 2 படத்தில் இடம் பெரும் ரவுடிபேபி பாடல் வெளிவந்து  சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் , சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் அதிக பார்வையாளர்களை ஈர்த்து டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், கர்நாடக விநியோக உரிமையை Goldie Films எனும் நிறுவனம் 1.44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படத்திற்கு இவர்கள் தான் கர்நாடக விநியோகஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது  


இதில் மேலும் படிக்கவும் :