தனுஷுடன் போட்டிபோடும் சிவகார்த்திகேயன்! போட்டிக்கு தயாரான "மாரி"

Last Updated: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (12:18 IST)
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படமும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படமும் ஒரே தேதியில் வெளியாவதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. 
சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் தனுஷ். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தின் மூலம் சிவாவை சினிமா உலகில் விதை போட்டு விதைத்தவர் தனுஷ் . அதைப் பல மேடைகளில் சிவகார்த்திகேயன் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் சில சூழல் வழுக்கைத் தலைபோல வழுக்கி விடுவதும் உண்டு அல்லவா? அப்படியொரு சூழல் தான் தற்போது நடந்துள்ளது.
 
இன்றைய மார்க்கெட்டில் பெரிய இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் , பெரிய இடத்து மாப்பிள்ளையான தனுஷிடம் நேரடியாக தன் படம் மூலம் மோத ஆரம்பித்து விட்டார்.  வரும் 21-ம் தேதி தன் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள "கனா" வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கேட்ட  சிவாவுக்கு சங்கமும் கேட்டைத் திறந்து விட்டது. 
 
இதற்கிடையில் மடை திறந்த தண்ணீரில் பாறாங்கல் போட்டு அடைக்க தனுஷ் துணிந்து விட்டார்.   அதாவது , தயாரிப்பாளர்  சங்கத்தை அணுகாமலே ’மாரி2’ வை 21-ம் தேதி ரிலீஸ் செய்வதாக தனுஷ் தடாலடியாக அறிவித்து விட்டார். 
 
உடனே "கூட்றா பஞ்சாயத்தை" என பல தயாரிப்புத் தரப்புகள் வந்து சமரசத்திற்கு அமர்ந்தது . இருந்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை, மெஜாரிட்டி பெரிய இடத்து மாப்பிள்ளைக்கே அதிகம் வாய்த்தது . என் படம் 21ம் தேதி ரீலீஸ் ஆகும்..ஆகணும் என்பதில் தனுஷ் உறுதியாக நிற்க, சங்கமும் துண்டை உதறிவிட்டது. வர்ற 21-ம் தேதியும் அடுத்து வரும் ஜனவரி 10-ம் தேதியும் யார் வேணாலும் எப்படி வேணாலும் படங்களை ரிலீஸ் பண்ணிக்கோங்கப்பா..இப்போ எங்களை ஆள விடுங்க  சாமி என சங்கம் சரண்டர் ஆகிவிட்டது . 
 
நேற்றுவரை சிவாவும், தனுஷும்  ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு வர இன்று அந்த தட்டையே பொளந்து விட்டனர். அதனால்  சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் தங்கள் படங்கள்  மூலமாக நேருக்கு நேர் மல்லுக்கட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
 
என்னதான் நடக்கபோகுது பொறுத்திருந்து பார்ப்போம் ..!


இதில் மேலும் படிக்கவும் :