1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (17:15 IST)

ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் இளையராஜா !

இந்திய  சினிமாவில் மூத்த இசையமைப்பாளர் இளையராஜா.தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவில் மூத்த இசையமைப்பாளர் இளையராஜா.  இவர் இதுவரை பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பல சாதனைகள் படைத்துள்ள இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 2 ஆம் தேதி தனது பிறந்த நாள் கொண்டாடுவார். எனவே இந்த ஆண்டு தனது பிறந்த நாளுக்கு கோவையில் இசைக்கச்சேரி நடத்த  திட்டமிட்டுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கங்கை அமரன் கவனித்து வருவதாகவும், இது அவரது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உண்மையில் இளையராஜாவின் பிறந்த நாள் ஜுன் 3 ஆகும். கலைஞர் கருணா நிதியின் பிறந்த நாளும் அன்றுதான் என்பதால் தன்னைச் சந்திக்க வரும் விசிபிக்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு  நாள் முன்கூட்டி பிறந்த நாள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.