செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (17:11 IST)

பிரபல இசையமைப்பாளர் காலமானார் ! பிரதமர் மோடி இரங்கல்

Shivkumar Sharma
பிரபல சந்தூர் இசைக் கலைஞர் ஷிவ்குமார் சர்மா இன்று காலமானார்.

ஜம்முவில் பிறந்த ஷிவ்குமார் சர்மா, சந்தூர் என்ற கருவியை இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

இவர் கடந்த 1956 ஆம் ஆண்டு ஜனக் கனக் பாயல் பாஜே என்ற படத்தில் காட்சிக்கு பின்னணி இசை அமைத்தார். அதன்பின்ம்  ஹரிபிராசத் என்பவருடன் இணைந்து சில்சிலா, பால்ஸ், லம்ஹே, சாந்தினி , தர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு சிறு நீரகப்  பிரச்சனை இருந்ததால் இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது இறப்பிற்கு பிரதமர் மோடி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.