1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (15:55 IST)

பாடகி பி.சுசீலாவுக்கு சிறப்பு கெளரவம் !

suseela
தமிழ் சினிமாவில் மூத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா. இவருக்கு புதிய கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த பின்னணி பாடகிபி.சுசீலா. சினிமாவில் , எம்.எஸ்.வி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர்  இதுவரை  சுமார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார்.

இ ந் நிலையில், இந்திய தபால் துறை பி.சுசீலாவின் உருவத்தில் தபால்  தலையும், அவரது உருவம் அச்சிட்ட சிறப்பு தபால் உறையும் வெளியிட்டுள்ளது. இது அவருக்குப் புதிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது.

இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு சினிமாதுறையினரும் வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.