வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (15:04 IST)

தன் இசையால் படத்துக்கு உயிர் கொடுப்பவர் இளையராஜா - பாரதிராஜா புகழாரம் !

ஒன்றுமே இல்லாத படத்திற்கு தன் இசையால் உயிர் கொடுப்பவர் இளையராஜா என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
எஸ்.என்.எல். மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தமிழரசன். இப்படத்தை பாபு லோகீஸ்வரன் என்பவர் இயக்க,  விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யாநம்பீசன் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமத்துள்ளார்.
 
இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா  நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதிராஜா கூறியதாவது :
 
தமிழரசன் என்ற பெயர் நன்றாக உள்ளது. இளையராஜாவை மிஞ்ச இனி ஒரு இசையமைப்பாளர் வந்தாலும் முடியாது.
 
ஒன்றுமில்லாத படத்திற்கு உயிர் கொடுத்து தனது இசையால் பேச வைத்தவர் அவர்.  அவருக்கு எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது இசைக்கு ஈடு இணையில்லை என தெரிவித்துள்ளார்.