செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:25 IST)

தரமாக உருவாகும் தர்பார் பேக் ரவுண்ட் மியூசிக்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. மேலும், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பின்னணி இசையை உருவாகும் வேலையில் அனிருத்  மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.  அப்போது ஏ.ஆர்.முருகதாஸும் உடனிருந்து அதனை கவனிக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு # தர்பார் பின்னணி ஸ்கோர் முழு வீச்சில் நடக்கிறது என கூறியுள்ளார்.