திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (18:52 IST)

ஜெர்மனி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஆலோசனை

india germany
ஜெர்மனி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஆலோசனை
ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து பெர்லின் புறப்பட்டு சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், உக்ரைன் - ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்தனர்.
 
மேலும் பிரதமர் மோடி ஜெர்மனியில் நடைபெறும் 2-வது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து இந்தியா வரும் வழியில் பாரிசில் சிறிது நேரம் தங்கி இருந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.