1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:09 IST)

15 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகை சமந்தா

15 பச்சிளம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுடன் திருமணம் சமீபத்தில் நடந்தது.



நடிகை சமந்தா ஆரம்ப காலத்திலிருந்தே சமூக பணி செய்வதிலும், மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ உதவிகளை தனது மருத்துவ நண்பர்களோடு செய்து வருகிறார்.
 
இந்நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சமந்தா, பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இநிலையில் தற்போது ஒரே சமயத்தில் 15 பச்சிளம் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு சமந்தா உதவியிருக்கிறார்.
 
15 குழந்தைகளுக்கும் விஜய்வாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இது குறித்து சமந்தா கூறுகையில், அழகான 15 குழந்தைகளும் இப்போது ஆரோக்கியமான இதயத்துடன் நலமாக இருக்கிறார்கள் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த செயலை திரையுலகினரும் தொண்டு அமைப்பினரும் பாராட்டியுள்ளனர்.