வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (21:43 IST)

அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் - ரஜினி!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்  நடந்து வருகிறது.
 
இப்படத்தை ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
 
இப்பட ஷூட்டிங் இம்மாதம்  நிறைவடையும் என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், வேட்டையன் படத்தில் தனக்கான ஷூட்டிங் முடிந்து இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான  நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் அரசியல் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்.  வேட்டையன் பட ஷூட்டிங் நன்றாக நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.