1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (15:50 IST)

''எனக்கு சம்பளம் வேண்டாம்! '' நிதிநெருக்கடியால் அதிபர் முடிவு!

Asif Ali Zardari
நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு  தனது பதவிக் காலம் முடியும்வரை தனது சம்பளத்தை வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
 
எனவே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்   நவாஷ் ஷெரீப்பில் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராகவும், பாகிஸ்தானின் 24 வது அதிபராக ஆசிஃப் அலி சர்தாரியும் பதவியேற்றனர்.
 
தற்போது பாகிஸ்தானில்  நிதி நெருக்கெடி நிலவிவருவக்தால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு  தனது பதவிக் காலம் முடியும்வரை தனது சம்பளத்தை வேண்டாம் என்று அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
 
நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு கருவூலத்தில் மேலும் சுமை கூட்டுவதை தவிர்க்கும் வகையில் இம்முடிவை எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி 8 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில், புதிய அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்காலம் முழுவதும் சம்பளமே வேண்டாம் என கூறியுள்ளதற்கு பலரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.