விஜய் அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு இல்லை: ‘மார்க் ஆண்டனி’ படத்தின் பிரபலம்..!
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சிக்கு தனது ஆதரவு இல்லை என விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் சிஏஏ சட்டத்துக்கு எதிராக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த அறிக்கையை குறிப்பிட்ட தயாரிப்பாளர் வினோத் இந்திய குடியுரிமை சட்டம் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறும் நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு தனது ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் விஜய் அரசியல் குறித்து தனக்கு கவலையாக உள்ளது என்றும் புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்களுடன் சேர்ந்து அவர் எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் வினோத்துக்கு விஜய் ரசிகர்கள் கண்டம் கண்டனங்களை தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது