திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (09:17 IST)

அதுக்கு அதிமுகவுக்கு அருகதையே கிடையாது! – மு.க.ஸ்டாலின் காட்டம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அதிமுகவுக்கு அருகதை இல்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

முன்னாள் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் ”ஜெயலலிதா இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதிமுக அமைச்சர்களுக்கு இப்போதுதான் ஜெயலலிதா நினைவு வருகிறது. அவசரமாக ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கின்றனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அதிமுகவுக்கு தகுதி இல்லை. அவர்களது ஆட்சி காலத்தில்தான் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் போன்றவை நடந்துள்ளன” என பேசியுள்ளார்.

மேலும் அடுத்த தேர்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கு என்றும், அதற்கு பிறகு பொள்ளாச்சி வழக்கு சம்பந்தப்பட்டவர்களை யார் விட்டாலும், இந்த ஸ்டாலின் விடமாட்டேன் எனவும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.