வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (14:13 IST)

உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்- நடிகர் சூர்யா

surya 42
சூர்யா -42 படம் குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ஹ்டது. இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில், சுதா இயக்க, சூர்யா தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 42 படத்தின் பூஜை   நேற்று முன் தினம் சென்னையில் தொடங்கியது.இந்த பூஜையில் சூர்யா, சிறுத்தை சிவா,  தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்படம் பான் இந்தியா திரைப்படமாகவும், தமிழ் தெலுங்கு கன்னடம் ஒரியா மராத்தி இந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் பற்றி யாரும் எதுவும் பேசாத நிலையில், இன்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ''சூர்யா-42 படத்தின் பூஜை போடப்பட்டு, பட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதற்கு உங்களின் ஆசிர்வாதம் வேண்டும் ''எனத் தெரிவித்து, இப்படத்தின் இயக்குனர் சிவாவும் அவரும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகிய மூவரும் நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படங்களில் இது அதிக பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.