வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:57 IST)

இந்தி ''விக்ரம் வேதா''வின் டீசர் ரிலீஸ்! அதிரடி ஆக்சன் காட்சிகள்... மிரண்ட ரசிகர்கள்!

VIKRAM VEDHA
இந்தியில் ரீமேக் ஆகி வரும் விக்ரம் வேதா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ரிலீஸாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில், மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விக்ரம், வேதா படத்தின்   டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தனர். இதில் ஹீரோவான சாயீப் அலிகானும், வில்லனாக  நடித்துள்ள ஹிருத்திக் ரோசனும் நடிப்பில் அசத்தியுள்ளது ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது.

இந்த டீசர் ரீலீஸான 2 மணி நேரத்தில் சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த டீசருக்கு  5 லட்சம் லைக்குகளும், 44 ஆயிரம் பேர் கமெண்ட் பதிவிட்டு, இணையதளத்தை திருவிழா கோலமாக்கியுள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படமும் தமிழில் வெளியான விக்ரம் வேதா போல் விறுவிறுப்பாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.