1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:10 IST)

சினிமாவில் இந்தக் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்- நடிகை சமந்தா

சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை சமந்தா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது, காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். இந்த படம்  இன்று ரிலீஸாகி இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில்,தன் 10 வருடங்களுக்கு மேலான சினிமா வாழ்க்கையில், இடத்தனைந்தூரம் வருவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இன்று இப்போது என்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமாவில், கதாநாயகி ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது, ஒரு ஹீரோ வந்து காப்பாற்றும் வழக்கமான கதையை தேர்வு செயயாமல்,  வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமாவில்  தைரியமான கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.