செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:29 IST)

“சினிமா பின்னணி இல்லையென்றால்…” -பாலிவுட் அரசியல் பற்றி நீது சந்திரா குற்றச்சாட்டு!

தமிழில் யாவரும் நலம், யுத்தம் செய், தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் நீத்துசந்திரா. ஆனால் அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட் படங்களிலும் நடித்த அவர், அங்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இப்போது அவர் நெவர் பேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மேலும் அடுத்து இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டில் சினிமா பின்புலம் இல்லாமல் வருபவர்கள் வாய்ப்புகளைப் பெறுவதற்கு போராட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் ‘ இது ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் நடக்கும் விஷயம் இல்லை. அனைவருக்கும் இந்த நிலைதான். வாய்ப்புகளுக்காக போராட வேண்டும். இதை பிரியங்காவும் சந்தித்துள்ளார். ஆனால் அனைவருமே அதை வெளியில் வந்து பேசுகிறார்களா என்பதே விஷயம்.” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.