துணை நடிகை தற்கொலை விவகாரம்: செல்போன் கண்டுபிடிப்பு
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவர் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை பவுலின் ஜெசிகா என்ற நடிகை செப்டம்பர் 17 ஆம் தேதி தூக்கிட்டுச் செனறு கொண்டார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் வாய்தா, துப்பரிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர் ஜெசிகா பவுலின். இவர் நேற்று, ஆட்டோவில் இருந்து இறங்கி, தன் வீட்டிற்குச் செல்ல மாடிப் படி ஏறும்போது மிகவும் சோர்வுடன் சென்றார்.
இதற்கான சிசிடிவி வீடியோ அன்று வெளியானது. மேலும், ஜெசிகாவின் காதலனின் நண்பர் பிரபாகரன் பதற்றத்துடன் வீட்டிற் வரும் காட்சிகளும்ம் இன்று வெளியானது.
எனவே, காதல் விவகாரத்தில் ஜெசிகா தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வந்த நிலையில், சினிமா படத் தயாரிப்பாளர் சிராஜை அவர் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், சிராஜின் நண்பர் பிரபாகரனிடம் போலீஸார் விசாரித்ததில், ஜெசிகாவின் 3 போன்கள், ஒரு கேட் உள்ளிட்டவை கைப்பற்றுள்ளது. இந்த ஐ போனை சிராஜ் வாங்கிக் கொடுத்துள்ளார். விசாரணைக்கு சிராஜ் இன்னும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.