1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (07:56 IST)

நான் செஞ்ச பெரிய தவறு திருமணம் தான்: ரேவதி பேட்டி

பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் கமல்ஹாசனுடன் ‘புன்னகை மன்னன்’, ‘ஒரு கைதியின் டைரி’, ரஜினியுடன் ‘கை கொடுக்கும் கை’, விஜயகாந்துடன் ‘வைதேகி காத்திருந்தாள்’, என் ஆசை மச்சான்’, பிரபுவுடன் ‘அரங்கேற்ற வேளை’, ‘உத்தமபுருஷன்’, கார்த்திக்குடன் ‘கிழக்கு வாசல்’ உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
 
 
நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டிருந்தபோது 1986ஆம் ஆண்டு திடீரென ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேவதி. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் திருமணமான நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினம். எனவே ரேவதியையும் தமிழ் சினிமா ஒதுக்க ஆரம்பித்தது. ரேவதியின் திருமண வாழ்க்கையும் கசப்பான அனுபவமாக இருந்தது. 2002ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்த சுரேஷ் மேனன் - ரேவதி தம்பதியினர் அதன்பின் பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றனர்.
 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ரேவதி, ‘என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என் திருமணம் என்றும் இளவயதில் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் என் சினிமா பாதை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும், இன்னும் அதிகமாக நல்ல படங்களில் நடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல கேரக்டர்கள் வந்து கொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ரேவதி கூறியுள்ளார்.