ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:24 IST)

திருமணமான கையோடு மன்னிப்பு கேட்ட அனிதா: யாரிடம்? எதற்கு தெரியுமா?

திருமணம் முடிந்த கையோடு செய்தி வாசிப்பாளர் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.  
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் தற்போது காப்பான் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் அனிதாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. யாருக்கு தெரியாமல் திடீரென இவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் இவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சியான நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார். 
 
அனிதா பதிவிட்டுள்ளதாவது, முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய இன்ஸ்டா நண்பர்களுக்கு..
25 ஆம் தேதி திருமணம் முடிந்தது. 22 ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்.. இன்ஸ்டாவில் 26 ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் ப்ளாக் செய்யப்பட்டு இருந்தது. எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது.
 
"அனிதா சம்பத் திடீர் திருமணம்" என்றெல்லாம் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை, 3 வருட காதல், பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த ப்ராபர் திருமணம்.
திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.
 
என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் இன்ஸ்டாவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். என தெரிவித்துள்ளார்.