புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:22 IST)

பல ஆண்களை திருமணம் செய்து, லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண் ...

ஹைதராபாத் நகரில் வசித்து வரும்  நரசிம்மா வேணுகோபால் என்பவர், வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதனால் அவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்கு பெண் வேண்டுமென பதிவு செய்திருந்தார்.
இந்தப் பதிவை பார்த்த, அருணா என்ற பெண் தனக்கு விருப்பம் உள்ளதாக, நரசிம்மாவை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அவர் நர்சிங் படிப்பை முடித்துள்ளதால் வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ளவும் வசதியாக இருக்குமென நினைத்து நரசிம்மா முடிவு செய்தார். ஆனால் திருமணமான  சில மாதங்களில் இருவருகுமிடையே வாக்குவாதம் எழுந்து சண்டை வரவே அருணா நகைகளை எடுத்துக்கொண்டு சென்றதாகத் தெரிகிறது. 
 
இந்நிலையில் சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார் என காத்திருந்த நரசிம்மா, மனைவி வராததால் அவரது வீட்டுக்குச் சென்று அழைத்துவரச் சென்றார். அப்போது  அருணாவுக்கு பல ஆண்களுடம் ஏற்கனவே திருமணமாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் நரசிம்மா.
 
பின்னர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். போலீஸார் , புகைப்படத்தில் அருணாவுடம் உள்ள நபர்களை விசாரித்துள்ளனர். அதில் பலரை ஏமாற்றி அவர் பணம் பறிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
 
இதனையடுத்து அருணாவை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.