வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:16 IST)

காதலனை கைப்பிடித்த அமித் ஷா: வைரல் திருமண புகைப்படங்கள்!

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஆதித்யா - அமித்ஷா திருமண புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
அமித் ஷாவும் ஆதித்யா மடிராஜூயும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் ஒருவர்பால் மற்றவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினர். அன்று முதல் இருவரும் இணைந்தே இருக்கின்றனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் சமுதாயத்தின் அத்தனை தடைகளையும் தாண்டி திருமணம் செய்துக்கொண்டனர். இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொட இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். 
 
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது. இதோ அவர்களின் புகைப்படம்...