வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (12:26 IST)

உடல் எடையை குறைத்ததும் சம்பளத்தை கூட்டி கண்டீஷன் போடும் சிம்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.  


 
அன்பானவன் அசாராதவன்  அடங்காதவன் படத்திற்கு எடையை கூட்டிய சிம்புவுக்கு லக் அடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.  
 
ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அப்படத்தில் சிம்பு குண்டான தோற்றத்தில் இருந்ததாக சொல்லி  கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.
 
இதனால் செம்ம கடுப்பான சிம்புவுக்கு அவரது ரசிகர்களே உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அதனால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் புறப்பட்ட சிம்பு அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்து உடல் எடை குறைத்துவிட்டு நாடு திரும்பினார்.  


 
இந்நிலையில் உடல் எடை குறைத்த உடனே தற்போது சம்பளத்தை ஏற்றியுள்ளார். மாநாடு படத்திற்கு பிறகு கௌதம் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு 6 கோடி ருபாய் சம்பளம்  அட்வான்ஸாக மட்டுமே பெற்றுள்ளாராம். மேலும் படத்தின் லாபத்தில் பெரிய பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். பொதுவாக பெரிய நடிகர்கள் தான் படத்தின் லாபத்தில் பங்கு போடுவார்கள் தற்போது சிம்புவும் இப்படி இறங்கியுள்ளது தயரிப்பாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.