வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (20:51 IST)

சின்ன கேப்டன் ரிட்டர்ன்ஸ் – சண்முக பாண்டியனின் அடுத்த படம்

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் முதன்முறையாக போலீஸ் கெட் அப்பில் நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் காலோச்சியிருக்கும் காலம் இது. முரளி மகன் அதர்வா, கார்த்தி மகன் கௌதம் கார்த்திக் என பல நாயகர்களின் வாரிசுகள் திரையில் தங்கள் முத்திரைகளை பதித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர், கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே நினைவில் வருபவர் விஜயகாந்த். அவரது மகனான சௌந்திரபாண்டியன் அவரளவுக்கு திரைப்படங்களில் புகழ் பெற முடியவில்லை என்ற நிலை இருந்து வருகிறது. கடைசியாக இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு நடித்திருந்தார் என்ற பெயரை கொடுத்தது.

இந்நிலையில் ஒரு புதிய போலீஸ் படம் நடிக்க தயாராகி வருகிறார் சண்முக பாண்டியன். இயக்குனர் சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பூபாலன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இது குறித்து அவர் “இது பக்காவான போலீஸ் என்டர்டெய்னர் படம். இதற்கு சண்முக பாண்டியன்தான் சரியாக இருப்பார் என்பதால் நான் வேறு ஆப்சன் யோசிக்கவே இல்லை. போலீஸ் திரைப்படம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் விஜயகாந்த் தான். அவரை பெருமைபடுத்தும் விதமாக சண்முக பாண்டியனுக்கு இந்த படம் இருக்கும். இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் காஞ்சிபுரத்தில் நடக்க உள்ளது. இந்த படத்தின் தலைப்பை சஸ்பென்சாக வைத்துள்ளோம். விரைவில் விஜயாகாந்த் அவர்களே அந்த தலைப்பை வெளியிடுவார்” என தெரிவித்துள்ளார்.