திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (11:42 IST)

தயாரிப்பாளரிடம் காதல் கடிதத்தை கொடுத்தேன்! ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? ஷகீலா கொடுத்த ஷாக்.!

ஏராளமான படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை ஷகிலாவின் வாழ்க்கை  திரைப்படமாகிறது. 


 
எல்லா நடிகைகளைப் போல ஷகீலாவின் வாழ்விலும் ஒரு காதல் கதை இருக்கிறது அதனை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தை மணியன்பிள்ள ராஜு தான் தயாரித்து இருந்தார். 
 
அந்தநேரத்தில் என் தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போக சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் மணியன்பிள்ள ராஜுவிடம் படத்தில் நான் நடிப்பதற்கான முன்கூட்டியே முழு சம்பளத்தையும்  கேட்டேன்.


 
நான் கேட்டவாறே  என்னுடைய வேண்டுகோளை ஏற்று எனக்கு கொடுக்கப்பட வேண்டிய முழு சம்பளத்தை அந்த படம் முடிவதற்குள்ளாகவே கொடுத்து விட்டார். அந்த உதவி  என் தாயின் மருத்துவ செலவுக்கு பெரிதும் உதவியது. இந்த காரணத்தால் அந்த படத்தில் நடித்த போது ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. 


 
அவரிடம் நான் காதல் கடிதத்தை கொடுத்தேன். ஆனால், கடைசி வரை அந்த கடிதத்திற்கான பதிலை அவர் சொல்லவே இல்லை’ என்று கூறியுள்ளார் ஷகிலா.