செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (11:14 IST)

ராணுவ வீரருடன் செல்போனில் பேசிய விஜய்! வைரலாகும் உரையாடல் வீடியோ!

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ராணுவ வீரருக்கு போன் செய்து உரையாடிய வீடியோ ஒன்று முதன் முறையாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த பதில் தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் 20 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது காஷ்மீர் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் எல்லைக்கு பாதுகாப்பிற்காக செல்ல இருந்த இந்திய ராணுவத்தில் இருக்கும் செல்வம் என்ற விஜய் ரசிகர் ஒருவருடன் நடிகர் விஜய்  செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்தியை பலரும் நம்பாமல் இருந்தனர். 
 
இந்த நிலையில் தற்போது ராணுவ வீரர் செல்வதுடன், விஜய் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த உரையாடலில், செல்வத்திற்கு தைரியம் சொல்லும் விஜய், ஒன்றும் ஆகாது தைரியமாக சென்று வாங்க. நீங்க வந்ததும் நாம் இருவரும் நிச்சயம் சந்திப்போம் என்று கூறியுள்ளார். 
 
இந்த ஆடியோ விஜய் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு பெரும்  வைரலாகி வருகிறது.
https://twitter.com/Official_AAD/status/1101487660411973632