செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (11:29 IST)

ஜூலியை இந்த அளவுக்கு இருப்பாருன்னு நினைக்கவே இல்லை; நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, போலி என்று மக்களிடம் பெயர் வாங்கினார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஜூலிக்கு சினிமா படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் தொடர்பான புகைப்படம் வெளியான பிறகே ஜூலி நடிப்பது தெரிய வந்தது. தற்போது ட்விட்டரிலும்  ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தான் எடுக்கும் செல்ஃபிக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு  வருகிறார்.
 
இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 62 படத்தில், முதலி ஓவியா நடிப்பதாக  கூறப்பட்டது. பிறகு ஜூலி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் ஜூலிக்கு முக்கிய கதாபாத்திரம்  என்று கூறப்படுகிறது. கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளது குறித்து ஜூலி வாய் திறக்கவே இல்லை. செல்ஃபி புகைப்படங்களை  ட்விட்டரில் வெளியிட்டு வரும் ஜூலி, படத்தில் நடிப்பது குறித்து வாய் திறக்கவே இல்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை இந்த அளவுக்கு இருப்பருன்னு நினைக்கவே இல்லை என்று கூறி வருகின்றனர்.