நான் ஜூலியுடன் செல்ஃபி எடுக்கவே வந்துள்ளேன்; வியப்பை ஏற்படுத்திய நபர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னுடைய கேளிக்கையான போராட்ட வசனங்கள் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க ஜூலி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கெடுத்துக் கொண்டார். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பொது மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம். ஆனால் அதே சமயம் அந்த நல்ல பெயரை தக்க வைக்க ஜூலி போராடி வருகிறார். இந்நிலையில் சத்யா என்ற டிசிஎஸ் ஊழியர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் நிகழ்ச்சியில், நான் அவரின் பயங்கரமான ரசிகன் என்றும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்றும் கூறி பார்ப்பவர்களை வியப்பை ஏற்படுத்தியுள்ளார். பிறகு, நான் ஜூலியுடன் செல்ஃபி எடுத்துவிட்டுத்தான் செல்வேன் என்று நிகழ்ச்சி மேடையிலேயே ஜூலியுடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.