புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:32 IST)

ஆரம்பத்துல தப்பு தப்பாதான் வாசித்தேன்- ஊக்கம் கொடுத்த இளையராஜா பேச்சு

இளைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,  எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில்  அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் இளையாராஜா பேசியதாவது:

 
``இதுவரைக்கும் 1300 படங்கள்கிட்ட இசையமைச்சுட்டேன். ஆனா, மூணு நிமிடத்துக்குமேல ஒரு பாட்டை கம்போஸ் பண்ணினதே கிடையாது.  சார் உங்க மியூசிக் நல்லா இருக்கு'னு என்கிட்ட யாராவது சொன்னாங்கனா, ரொம்ப நல்லா மூச்சு இழுக்குறீங்க சார்னு சொல்ற மாதிரி இருக்கும். ஏன்னா, அது சுவாசம் மாதிரி, அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு.  இந்த ஆர்மோனியப் பெட்டியை எடுத்துட்டு 1968-ல் சென்னைக்கு வந்தேன். ஏவி.எம் ஸ்டுடியோஸ், ரஜினி, கமல்... யாரையும் நான் நம்பலை. நானும் யார்கிட்டேயும் போகலை. எல்லோரும்தான் என்கிட்ட வந்தாங்க. இதை தற்பெருமையாகச் சொல்லலை. உண்மையாக சத்தியமாகச் சொல்கிறேன். 
 
ஆர்மோனியம் மட்டும்தான் என்னுடைய நண்பன். ஆனா, முன்னாடி இதுமேல கையை வெச்சா அம்மா பெரம்பால அடிப்பாங்க. அப்புறம் ஒரு சூழல்ல வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. தப்பு தப்பாதான் வாசித்தேன். மக்களெல்லாம் பயங்கரமா உற்சாகப்படுத்தினாங்க. தப்பா வாசித்தாலே கைதட்டல் வருதே, கரெக்டா வாசித்தா எவ்வளவு கைதட்டல் வரும்னு அன்னைக்கு முடிவு பண்ணி, 24 மணி நேரமும் வாசிச்சுப் பயிற்சி எடுத்தேன். இந்த மாதிரி கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்தேன். எனக்கு இசையைத் தவிர எதுவும் தெரியாது" இவ்வாறு இளையராஜா பேசினார்.