1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:23 IST)

இளையராஜாவின் இசை மழையில் நனையவிருக்கும் சென்னை

தமிழ் திரையுலகில் அன்னக்கிளி படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் இவர் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
தற்போது 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, பல ஆயிரக்கணக்கான சாகா வரம் பெற்ற பாடல்களை அவர் படைத்துவிட்ட போதிலும் தன் இசைப் பயணத்தை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உற்ப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ’இசை ராஜா 75’ என்ற தலைப்பில் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை வரும் ஜனவரி மாதம்  நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக  நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்கம் சார்பில் அதன் தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன்,மற்றும் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து அடுத்த வருடம் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சிக்காக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.