1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (22:30 IST)

ஓவியா ஓகே சொன்னால் எனக்கும் ஓகே தான்: ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ்வை வெறித்தனமாக காதலித்த ஓவியா, ஆரவ் தன்னுடைய காதலை நிராகரித்ததால் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேறினார்.



 
 
இதனால் ஓவியா ஆர்மி, ஓவியா படையினர்களின் வெறுப்பை சம்பாதித்த ஆரவ், பிக்பாஸ் வீட்டில் இருந்து விரைவில் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆரவ் இறுதி வரை சென்று பரிசையும் தட்டி சென்றார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஆரவ், ஓவியாவுடன் நட்புடன் தொடர்ந்து இருக்க தயார் என்றும், ஓவியாவுக்கு ஓகே என்றால் அவருடன் இணைந்து நடிக்கவும் தயார் என்றும் கூறியுள்ளார். விரைவில் ஓவியா-ஆரவ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.