திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:22 IST)

பிக்பாஸ் டைட்டிலை வென்றால் இதை செய்வேன்; சொன்னதை செய்த ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும்  போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

 
 
பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டிலை ஜெயித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது ஆரவ் கூறியதாவது, பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த பணத்தை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தான்  செலவு செய்வேன் என்றார். ஆனால் சொன்னபடி செய்வாரா என்ற கேள்வியும், எதிபார்ப்பும் இருந்தது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம்  போக ஆரவுக்கு ரூ. 36 லட்சம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொன்னதுபோல் பரிசு தொகையில் ரூ. 5 லட்சத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்கு வழங்கி உள்ளார். இதனால் ஆரவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.