50 லட்சத்தை தட்டி சென்ற ஆரவ்: பிக்பாஸ் வெற்றி தருணங்கள்...


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (12:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சத்திற்கு காசோலை வழங்கப்பட்டது.

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாளன்று நமீதாவை தவிர வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 
 
இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து நலம் விசாரித்து கொண்டனர். 
 
இதைத் தொடர்ந்து கணேஷ் மற்றும் ஹரிஷ் வெளியேற ஆரவ் மற்றும் சினேகனில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. 
 
இந்த சீசன் முழுவதும் போட்டியாளர்களுக்காக மக்கள் 76,76,53,065 வாக்குகள் அளித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இறுதியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு பிக்பாஸ் கோப்பையை வழங்கினார்.  மேலும் ஆரவுக்கு ரூ.50 லட்சத்திற்கான பரிசு தொகையும் வழங்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :