ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஹ்ருத்திக் ரோஷன்!

Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:27 IST)

வார் படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.

ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவான ஆக்‌ஷ்ன மசாலா திரைப்படமான வார் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். அந்த படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹ்ருத்திக் ரோஷனுக்கு வசூல் ரீதியான வெற்றிப் படமாக அமைந்தது. அதையடுத்து இப்போதும் மீண்டும் சித்தார்த் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஹ்ருத்திக் ரோஷன். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. வார் படம் போலவே இந்த படமும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :