1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (14:22 IST)

ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோன் படத்தின் டைட்டில் அறிவிப்பு: வைரல் வீடியோ

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன்  நடிப்பில் கடந்த 2019ஆ ஆண்டு ‘வார்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘வார்’ இயக்குனர் சித்தார்த்  ஆனந்த் இயக்கத்தில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்
 
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் படத்திற்கு ‘ஃபைட்டர்’  என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோவை ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது