சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (19:07 IST)

ஹெச்.வினோத் நிறைய அறிவுரைகள் சொல்வார் - லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மற்றொரு முன்னணி இயக்குனராக ஹெச்.வினோத் பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இரு முன்னணி இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹெச்.வினோத். இருவரும் அடுத்தடுத்து ஹிட் படம் கொடுத்து, முன்னணி  ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வருகின்றனர்.

அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் தற்போது, விஜய்67 படத்தின் ஸ்கிர்ப்ட் மற்றும்  நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

அதேபோல்,  நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 3 வது முறையாக அஜித்துடன் இணைந்து ஹெச்.வினோத் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த லோகேஷ். சினிமாவில் என் நலம்விரும்பிகளில்  வினோத்தும் ஒருவர். அவர் எனக்கு சகோதரர் மாதிரி. இருவரும் அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவர் சதுரங்க வேட்டை படம் எடுத்த போது, நான் மா  நகரம், பின், அவர் தீரன் படத்திற்கு கார்த்தியைச் சந்தித்தார் , நானும் கைதிக்காக அவரைச் சந்தித்தேன். இதையடுத்து நான் மாஸ்டரில் பிஸியானேன், அவர் வலிமையில் பிஸியாகிவிட்டார். இருவரும் அடுத்து விஜய் 67 பட ஷீட்டிங்கிலும், அஜித் 61 பட ஷூட்டிங்கில் சந்திக்க வாய்ப்புண்டு. அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் தருவார் எனத் தெரிவித்துள்ளார்.