செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:16 IST)

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் குற்றாலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.