ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (11:09 IST)

எப்படி லீக் ஆச்சு! ஹன்சிகா அதிர்ச்சி

ஹன்சிகா சாமியார் வேடத்தில் தம் அடிக்கும் புகைப்படத்துடன் மஹா பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிம்பும் இந்த படத்தில் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. 


 
மஹா படத்தில்  சிம்புவுக்கு மிரட்டலான வேடமாம். ஆனால் படம் முழுக்க வரும் வேடமில்லை. மௌனராகத்தில் கார்த்திக் நடித்தது போன்ற வேடம் என்கிறார்கள்.சிம்பு, 'மஹா' படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார். சென்னையிலிருந்து இயக்குநர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். 
 
இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால் இதை மோப்பம் பிடித்த சிலர்  இணையத்தில் கசியவிட்டுவிட்டனர். இதனால் ஹன்சிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். மஹா படத்தில் சிம்பு நடிக்கப்போகும் செய்தி எப்படி முன்பே வெளியானது என்று தெரியாமல் பித்துபிடித்து போயுள்ளார் ஹன்சிகா. எது எப்படியோ முன்னாள் காதலர்களான சிம்பு ஹன்சிகா இப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பதை சுட்டிகாட்டும் விதமாக ஹன்சிகா ஒரு புகைப்படத்தை  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தை பார்த்தவர்கள் சிம்பு, ஹன்சிக இருவரும் காதலிப்பதாக  நெருப்பை பற்றவைத்துள்ளனர். எது எப்படியே இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி நிச்சயம் இப்படத்தில் சூப்பராக ஓர்க் அவுட் ஆகும் என்பது உறுதி.