கரூர் வாசவி மகிளா மண்டலியினர் சார்பில் மஹா சிவராத்திரி விழா நிகழ்ச்சி

C. ஆனந்த குமார்|
கரூர் வாசவி மகிளா மண்டலியினர் சார்பில் மஹா சிவராத்திரி விழா 156 வடிவிலான சிவலிங்கங்கள் அமைத்து வழிபாடு கரூர் நகரில் ஜவஹர் பஜார் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின அருகே, வீற்றிருக்கும் ஸ்ரீ வாசவி மஹாலில், கரூர் வாசவி மகிளா மண்டலியினர் சார்பில் 26 வது மஹா சிவராத்திரி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் தற்போதைய புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட, கவிதா சதீஸ் தலைமையில், ஏராளமான வாசவி மகிளா மண்டலி நிர்வாகியினர் சேர்ந்து பட்டு வஸ்திரத்தினால் ஏராளமான நிறங்கள் கொண்டு, உருவாக்கப்பட்ட ரோஜாப்பூக்களை சுற்றி, 156 விதமான  சிவலிங்கங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. 
 
மேலும், மாலை முதல் இரவு வரை ஒம்நமசிவாயா வேத பாராயணங்கள் முழங்க, தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு இரவு வரை ஒம் நமசிவாயா மந்திரங்கள் கூறி சிவபெருமானை வழிபட்டு சிவாராத்திரியை   கொண்டாடினார்கள். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் வாசவி மகிளா மண்டலியினர் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

 


இதில் மேலும் படிக்கவும் :