1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (13:46 IST)

கரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு மஹா தீபாராதனை

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு மூலவர் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி
கரூர் நகரின் மையப்பகுதியில், கருவூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயமானது, தமிழகத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
 
இந்நிலையில் சங்கடஹர சதூர்த்தி என்றாலே, விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், நேற்று இரவு மாசி மாதம் வரும் மஹா சங்கடஹர சதூர்த்தி என்பதினால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர்
விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு பால், பன்னீரு, திருநீர்களினால் அபிஷேகமும் தொடர்ந்து மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களினால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 
 
பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மற்றும் மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர். 
 
மேலும், சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதூர்த்தி தினத்தினை விட, மாசி மாதம் அதுவும் ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கடவுள்களுக்கு பிடித்த இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதூர்த்தியில் விநாயகரை தரிசித்தால் கோடி லாபம் கிட்டும் என்பதினால் பக்தர்கள் குவிந்து  விநாயகர் அருள் பெற்றனர்.