வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (12:12 IST)

கள்ளக்காதல் விவகாரம் : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு காதலுடன் தப்பி சென்ற தாய்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 
குன்றத்தூர் பகுதியில் வசித்து வருபவர் விஜய்(30). இவர் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி அபிராமி(25). இவர்களுக்கு 7வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
 
அபிராமிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பாக விஜய்க்கும், அவருக்கும் சண்டை இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில், மாதக்கடைசி காரணமாக நேற்று இரவு வங்கியிலேயே தங்கிய விஜய் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரின் இரு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டில் இறந்து கிடந்தது கண்டு அவர் அலறி துடித்துள்ளார். மேலும், அபிராமியையும் வீட்டில் காணவில்லை.
 
இது தொடர்பாக குன்றத்தூர் காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்து விட்டு அபிராமி தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 
 
பெற்ற குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அபிராமி தப்பி சென்ற விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.