செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (21:50 IST)

அனிருத்தை ரெக்கமண்ட் செய்த பிரபலம்: வேறு வழியில்லாமல் ஒப்பந்தம் செய்த ஷங்கர்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஏஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரில் ஒருவரைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஷங்கரின் விருப்பமாக இருந்தது. ஆனால் வேறு வழியின்றி பிரபலம் ஒருவரின் ஸ்ட்ராங்கான ரெகமெண்டேஷன் காரணமாக அவர் அனிருத்தை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பிரபலம் யார் எனில் ஷங்கரின் மகன் என்பதுதான் 
 
ஷங்கரின் மகனும் அனிருத்தும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் மட்டுமின்றி இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். எனவே அனிருத்துக்கு ’இந்தியன் 2’ படத்தில் வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும் என ஷங்கரின் மகன் தனது தந்தையிடம் பரிந்துரை செய்ததாகவும், அந்த பரிந்துரையை மீற முடியாமல் ஷங்கர் வேறு வழியின்றி அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் 2’ படத்திற்காக அனிருத் கம்போஸ் செய்த இரண்டு பாடல்களை கேட்ட கமலஹாசன் பாடல்கள் தனக்கு திருப்தி இல்லை என்றும் பாடல்களை கம்போசிங்கில் மாற்றம் செய்யவும் என்றும் அனிருத்திடம் கூறியதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது