1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja slams kamal in a interview

கமலுக்கு சட்டமும் தெரியாது, பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியாது: ஹெச் ராஜா

உலக நாயகன்
உலக நாயகன் என்று சொல்லிக்கொள்ளும் கமலஹாசனுக்கு உலக அறிவு சுத்தமாக கிடையாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை திருத்த அதிகாரம் கிடையாது என்று கமலஹாசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்
 
இது குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் கூறியதாவது: ‘உலக நாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவும் வேண்டும். பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் 11 தெளிவாக சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் இது என்று. 
 
மேலும் இது முதல் தீர்த்தம் அல்ல, இது ஐந்தாவது சட்டத்திருத்தம். இதற்கு முன்னர் நான்கு முறை திருத்தம் ஏற்பட்டுள்ளது. தில் மூன்று முறை காங்கிரஸ் இருக்கும்போது திருத்தப்பட்டது. அந்த நான்கு முறை திருத்தியபோது பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லாமல் தான் திருத்தினார்களா?  ஆகவே கமலஹாசன் அவர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியவில்லை சட்டமும் தெரியவில்லை’ இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்
அடுத்த கட்டுரையில்
திமுக பேரணி: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை!