வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (22:43 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷூக்கு குரல் கொடுத்த அனிருத்!

கடந்த சில ஆண்டுகளாக அனிருத் மட்டும் தனுஷ் இணையாக காரணத்தினால் வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி ஆகிய படங்களில் கேட்ட பாடல்களை ரசிகர்கள் கேட்க முடியாத நிலை உள்ளது. இதனால் மீண்டும் அனிருத் மற்றும் தனுஷ் எப்போது இணைவார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்
 
இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அனிருத் மீண்டும் தனுஷுடன் இணைந்து பணிபுரிவேன் என்று கூறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதன் முதல் கட்டமாக தற்போது தனுஷ் நடித்த படம் ஒன்றுக்கு அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இதனை அடுத்து விரைவில் அவர் தனுஷ் படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் இந்த பாடல் வரும் 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது