செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:13 IST)

அஜித்தை ஆசைநாயகனாக்கிய திரைப்படம் …. வெள்ளி விழா கொண்டாடும் ஆசை!

அஜித்,சுவலட்சுமி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்த ஆசை திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியுள்ளன.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும், சினிமாவை தனது எதிர்காலமாக நினைக்காத அஜித் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளவும், தான் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவும் மட்டுமே சினிமாவில் நடித்து வந்தார். ஆனால் அது எல்லாம் ஆசை திரைப்படம் வெளியாகும் வரைதான். அந்த படத்தின் வெற்றிதான் அவரை சினிமாவின் இனி நமக்கு எல்லாம் என்ற முடிவை எடுக்க வைத்தது.

ஆசை படத்தில் அஜித்துக்கு வெறும் சாக்லேட் பாய் கதாபாத்திரம்தான். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பிரகாஷ்ராஜ் மற்றும் சுவலட்சுமிதான். ஆனால் தனது அழகாலும், சிறப்பான நடிப்பாலும், அந்த படத்துக்குப் பின் ஆசை நாயகன் என்ற பெயரைப் பெற்றார். அந்த ஆசைப் படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் அந்த படத்தைப் பற்றி தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.